Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்கவிருக்கும் தடகள வீரர்கள் குழுவை பிரதமர் சந்தித்து உரையாடினார்

ரியோ ஒலிம்பிக்சில் பங்கேற்கவிருக்கும் தடகள வீரர்கள் குழுவை பிரதமர் சந்தித்து உரையாடினார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் ரியோ ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்தியக் குழுவின் ஒரு பகுதியான தடகளப் பிரிவில் பங்கேற்கவிருக்கும் 60 வீரர்களை இன்று சந்தித்தார்.

இவர்களை மொத்தமாக சந்தித்தது மட்டுமின்றி, இப்பிரிவைச் சேர்ந்த ஒவ்வொரு வீரரையும் பிரதமர் தனித்தனியாகச் சந்தித்து உரையாடினார். உலகின் மிகப்பெரும் விளையாட்டுப் போட்டிக்களத்தில் தங்கள் திறமையை மிகச் சிறந்த வகையில் வெளிப்படுத்துமாறு அவர் வீரர்களுக்கு உற்சாகமூட்டினார்.

ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக ஏற்கனவே பங்கேற்ற வீரர்களான எம்.சி. மேரி கோம், அஞ்சு பாபி ஜார்ஜ், பி. கோபிசந்த் ஆகியோரும் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

தடகளப் பிரிவில் வெவ்வேறு வகையான 13 பிரிவுகளில் பங்கேற்க 100க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறையின் மத்திய இணை அமைச்சரான டாக்டர். ஜிதேந்திர சிங் அவர்களும் இந்தச் சந்திப்பின்போது உடனிருந்தார்.