Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025   இறுதிப் போட்டியில் அற்புதமான வெற்றியைப் பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டியில் இந்திய அணியின் அற்புதமான வெற்றி. இறுதிப் போட்டியில் அவர்களின் செயல்திறன், சிறந்த திறமை, நம்பிக்கை ஆகியவற்றால் வெற்றி  குறிக்கப்பட்டது. இந்திய அணி, போட்டி முழுவதும் சிறப்பான குழுப்பணி மற்றும் விடாமுயற்சியைக் காட்டியது. நமது வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள். இந்த வரலாற்று வெற்றி எதிர்காலச் சாம்பியன்களை விளையாட்டுகளில் ஈடுபட ஊக்குவிக்கும்.

#WomensWorldCup2025”

***

(Release ID: 2185674)