Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வெண்கலப் பதக்கம் வென்ற மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு பிரதமர் பாராட்டு


பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

நமது துப்பாக்கி சுடும் வீரர்கள் தொடர்ந்து நம்மைப் பெருமைப்படுத்துகிறார்கள்!

 ஒலிம்பிக்கில் நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மனுபாக்கர், சரப்ஜோத் சிங் ஆகியோருக்கு வாழ்த்துகள். அவர்கள் இருவரும் சிறந்த திறன்களையும் குழுப்பணியையும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியா பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளது.

மனுபாக்கரைப் பொறுத்தவரை, இது அவரது தொடர்ச்சியான இரண்டாவது ஒலிம்பிக் பதக்கமாகும், இது அவரது நிலையான சிறப்பையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. #Cheer4Bharat”

***

PKV/RR/KR/DL