Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசாம், ஒடிசா மாநிலங்களுக்கு பிரதமர் பயணம்: விசாக பட்டினத்தில் சர்வதேச கடற்படை கப்பலணி திறனாய்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்


பிரதமர் திரு நரேந்திர மோடி அசாம், ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் 2016 பிப்ரவரி 5 முதல் 7 – ம் தேதி வரை 3 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.

அசாம் மாநிலம் திப்ரூகருக்கு பிப்ரவரி 5-ந் தேதி சென்றடையும் பிரதமர் லெபட்கட்டா என்ற இடத்தில் பிரம்மபுத்திரா கிராக்கர் மற்றும் பாலிமர் லிமிடட் என்ற நிறுவனத்தை துவக்கி வைக்கிறார். இந்த நிறுவனம் மொத்த வடகிழக்கு மண்டலத்திலும் முதலாவது பெட்ரோலிய வேதிப்பொருள் உற்பத்தித் திட்டமாகும். இதே நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனத்தில் உள்நாட்டுத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நாட்டிலேயே அதிக அளவிலான மெழுகு உற்பத்தி செய்யும் பிரிவினை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.

திப்ரூகருக்கு அருகே மோரன் என்ற இடத்தில் தேயிலைத் தொழிலாளர்களிடையே உரையாற்றுகிறார். சிப்சாகரில் ஸ்ரீமந்தா சங்கரதேவா சங்கத்தின் 85 – வது ஆண்டு மாநாட்டில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

குவஹாத்தியில் 12 வது தெற்காசிய விளையாட்டுக்களைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள் நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 நாடுகள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கின்றன.

பிப்ரவரி 6 ந் தேதி பிரதமர் விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படை கப்பலணி திறனாய்வு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அங்கு கடல் வாணிபம் சார்ந்த கண்காட்சி ஒன்றையும் பிரதமர் பார்வையிடுகிறார்.

பிரதமர் பிப்ரவரி 20 ந் தேதி புவனேஸ்வர் சென்றடைகிறார். அங்கு தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். திரு நரேந்திர மோடி பூரி நகரில் உள்ள ஜகன்நாதர் ஆலயத்திற்கு செல்கிறார்.

பாரதீப்பில் உள்ள அதிநவீன இந்தியன் ஆயில் நிறுவன எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். பாரதீப் எண்ணை சுத்திகரிப்பு ஆலையின் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 15 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருக்கும். இந்த சுத்திகரிப்பு ஆலையில் உள்ள இண்ட்மேக்ஸ் எனப்படும் இண்டேன் எரிவாயுவை அதிகபட்சமாக்கும் பிரிவு உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உயர் தரம் உள்ள எல்.பி.ஜி. வாயுவை உற்பத்தி செய்வதற்கென அமைக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு ஆலை கிழக்கு இந்தியாவில் ஹைட்ரோகார்பன் துறையில் புதிய தொழில்மயமாக்கலில் புதிய அலையை கட்டவிழ்த்து விட்டு பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும். இந்த சுத்திகரிப்பு ஆலையின் பிரதான கட்டுப்பாட்டு அறையையும் இண்ட்மேக்ஸ் பிரிவையும் பிரதமர் பார்வையிடுவார்.

பிப்ரவரி 7 ந் தேதி பிற்பகல் பிரதமர் விசாகப்பட்டினம் செல்கிறார். அங்கு சர்வதேச கடற்படை கப்பலணி திறனாய்வின் போது நடைபெறும் போர் ஒத்திகை செயல் விளக்கத்தையும் சர்வதேச அணிவகுப்பபையும் பிரதமர் பார்வையிடுவார். பிரதமர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றுவார்.

***