Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அசாம் மாநிலம் கோகாமுக்கில் ஐ.ஏ.ஆர்.ஐ நிலையத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டினார். பிரமாண்ட பொது கூட்டத்தில் உரையாற்றினார்

அசாம் மாநிலம் கோகாமுக்கில் ஐ.ஏ.ஆர்.ஐ நிலையத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டினார். பிரமாண்ட பொது கூட்டத்தில் உரையாற்றினார்

அசாம் மாநிலம் கோகாமுக்கில் ஐ.ஏ.ஆர்.ஐ நிலையத்திற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டினார். பிரமாண்ட பொது கூட்டத்தில் உரையாற்றினார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி அசாம் மாநிலம் கோகாமுக்கில் அமையவுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான (ஐ.ஏ.ஆர்.ஐ) அடிக்கல்லை நாட்டினார்.

பின்னர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் பொது கூட்டத்தில் உரையற்றிய பிரதமர், அசாம் மாநிலத்தின் வளர்சிக்கு மாநில அரசையும், முதல் அமைச்சர் திரு. சர்பானந்தா சோனோவாலையும் பாராட்டினார்.

ஐ.ஏ.ஆர்.ஐ-க்கு நாட்டப்பட்ட அடிக்கல், இந்த மொத்த பிராந்தியத்தின் எதிர்காலத்திற்கு நல்ல மாற்றத்தை கொண்டு வரக்கூடிய திறன் கொண்டது. வேளாண் தேவைகள், 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட வேண்டும். மாறிவரும் தொழில்நுட்பத்தின் பலனை விவசாயிகள் பெற வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

நவீன வேளாண் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைக் குறுக்கீடுகள் குறிப்பிட்ட பிராந்தியத்தின் தேவைக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

2022-ம் ஆண்டு, 75வது சுதந்திர தினத்திற்குள், விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக மாற்றும் தனது கனவு குறித்து பிரதமர் பேசினார்.

கடந்த மூன்று ஆண்டுகளில், மத்திய அரசு விவசாயிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்றும் பிரதமர் கூறினார். மண்வள அட்டை, பிரதமர் நீர் பாசனத் திட்டம், பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து விவரித்தார். நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள மண் வள ஆய்வுக்கூடங்கள் பற்றிப் பேசிய பிரதமர், விவசாயிகள் இடையே பயிர்க் காப்பீடு திட்டம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

வட கிழக்கு மண்டலத்தின் இணைப்பை மேம்படுத்தும் ஐந்து கூறுகளான ரயில், நெடுஞ்சாலை, விமான போக்குவரத்து, நீர்வழி போக்குவரத்து மற்றும் இணை வசதி என்று அழைக்கப்படும் “பஞ்ச’ தத்வா” குறித்து பிரதமர் பேசினார். “பஞ்ச’ தத்வா” மூலம் வட கிழக்கு மண்டலத்தின் செழிப்பை அதிகரிக்கவும், மக்களின் நலன் நோக்கியும் தனது அரசு செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் கூறினார்.