Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அதிபர் திரு புதினின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருடன் பேசி, வாழ்த்து தெரிவித்தார்


ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் திரு விளாடிமிர் புதினுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

அதிபர் திரு புதினின் 73-வது பிறந்தநாளையொட்டி அவர் நல்ல ஆரோக்கியதுடன், தனது முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இரு தரப்பு திட்டங்களின் முன்னேற்றங்களை இரு தலைவர்களும் ஆய்வு செய்ததுடன், இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான சிறப்பான மற்றும் சிறப்புரிமை பெற்ற உத்திசார் கூட்டுமுயற்சியை மேலும் வலுப்படுத்துவதில் தங்களது உறுதிபாட்டை மீண்டும் வலியுறுத்தினார்கள்.

இந்தியாவில் நடைபெற உள்ள 23-வது இந்திய-ரஷ்ய வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு வருகை தரும் அதிபர் திரு புதினை வரவேற்கத் தாம் ஆவலுடன் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

***

(Release ID: 2175955)

SS/BR/KR