Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அதிபர் புட்டினுக்கும் பிரதமருக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல்


இந்தியப் பொதுத் தேர்தலில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெற்றி பெற்றதையடுத்து ரஷ்ய கூட்டாட்சியின் அதிபர் திரு விளாடிமிர் புட்டின் பிரதமருக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இரு நாட்டு மக்களுக்கு இடையேயான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவதோடு, இருநாடுகளைப் பிணைக்கும் சிறப்பு மற்றும் சலுகையோடு கூடிய யுத்தி சார்ந்த பங்களிப்பை பிரதமர் மேம்படுத்துவார் என்ற உறுதியையும் அதிபர் புட்டின் தெரிவித்துக் கொண்டார்.

அதிபர் புட்டினின் வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இருதரப்பினருக்கு இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பையும் கடந்த சில மாதங்களாக அதிபர் புட்டினுடனான தனிப்பட்ட பரிமாற்றத்தையும் அவர் பதிவு செய்தார். மேலும் இந்தியாவிற்கும், ரஷ்யாவுக்கும் இடையே உள்ள காலத்தைக் கடந்த நீண்டகால இருதரப்பு பங்களிப்பை வளர்க்க அதிபர் புட்டினுடன் இனி நடக்கவிருக்கும் சந்திப்புக்களை எதிர்பார்த்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

——–

விகீ/எல்கே/கீதா