Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மறுசீராய்வு – வெண்மை நிறமுள்ள ஏ.டி.எம் செயல்பாடுகளில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு


வங்கி சாரா நிறுவனங்கள் இயக்கும் வெண்மை நிறமுள்ள ஏ.டி.எம் களை இயக்குவதற்கு அந்நிய நேரடி முதலீட்டை 100 சதவீதம் உயர்த்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை இதற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த செயல்பாடுகளுக்கான விதிமுறைகள் வருமாறு :

1. வங்கி அல்லாத நிறுவனங்கள் இதுபோன்ற ஏ.டி.எம். சாதனங்களை நிறுவலாம். இந்த நிறுவனங்களுக்கு 100 கோடி ரூபாய் தேவை. அந்த நிறுவனங்களின் சமீபத்திய நிதி அறிக்கையில் இந்தத் தொகையை குறிப்பிட்டிருக்க வேண்டும். இத்தொகையை தொடர்ந்து அந்த நிறுவனங்கள் பராமரிக்க வேண்டும்.

2. இதைத் தவிர மற்ற 18 வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு இதுபோன்ற ஏ.டி.எம் சாதனங்களை அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் அமைத்தால் அதேபோன்று 100 கோடி ரூபாய் முதலீடு தேவை, அதைத்தவிர அந்நிய நேரடி முதலீடு குறித்த கொள்கையின் அடிப்படையில் இது செயல்படுத்தப்பட வேண்டும்.

3, இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, அந்நிய நேரடி முதலீடு இருக்க வேண்டும்.

4. பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா திட்டம் உட்பட பல்வேறு நிதி குறித்த திட்டங்கள் பற்றி அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு அந்நிய நேரடி முதலீடு வருவதற்கான வாய்ப்புகளை இந்த முடிவு ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் முதலீடு செய்வதற்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்திய பின்னர், வெள்ளை நிற ஏ.டி.எம் செயல்பாடுகளுக்கு தேவையான முதலீடுகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராமப்புறங்கள் மற்றும் ஓரளவு நகர்ப்புறங்கள் ஆகியவற்றில் ஏ.டி.எம் பயன்பாடு (மூன்றாவது முதல் ஆறாவது அடுக்கு வரையிலான நகர் மற்றும் கிராமப்புறங்கள்) அதிகரிக்கும்.

5. நிதிப்பிரிவின் வளர்ச்சியில் அந்நிய முதலீட்டாளர்கள் பங்கு பெறுவதால், அது மேலும் பயனடையும்.

பின்னணி

நாட்டில் அனைவரும் வங்கி சேவைகளின் பயன்கள் சென்றடைய வேண்டும் என்பது அரசின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. வங்கி சேவைகளை ஏ.டி.எம் சாதனங்கள் நுகர்வோருக்கு அளிக்கின்றன. வங்கிகளுக்குச் செல்லாமல் இவற்றை மற்ற நிதி நிறுவனங்கள் மூலம் பெறுவதற்காக இந்த சேவைகள் பயன்படுகின்றன. ஏ.டி.எம் சாதனங்கள் ஒவ்வொரு ஆண்டும் மிக அதிகமான அளவில் பயன்படுத்தப்படுகிறது. இவை பெரிய நகரங்களில் அதாவது முதலாவது மற்றும் இரண்டாவது அடுக்கு நகரங்களில் பயன்படுத்தப்படுகிறது, இதை விரிவுபடுத்தி மூன்றாவது அடுக்கிலிருந்து 6-வது அடுக்கு வரையிலான கிராமப்புறங்களில் வங்கிசாரா நிறுவனங்கள் அமைக்க தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏ.டி.எம் சாதனங்கள் வெண்மை நிற ஏ.டி.எம் சாதனங்கள் என்று அழைக்கப்படும்.

இதுவரை அரசின் அனுமதியுடன் தான் அந்நிய நேரடி முதலீடு மூலம் இதுபோன்ற ஏ.டி.எம் சாதனங்கள் அமைக்க முடியும் என்ற நிலை இருந்தது. இதற்கு காலதாமதம் ஆவதால் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

••••••