பி.எம்.இந்தியா
இயற்கையின் எல்லையற்ற கருணையும், சூரிய பகவானின் சக்தியும், மழையின் புனிதமிக்க ஆசியும் நமது வாழ்வை மகிழ்ச்சியாலும் நல்வாய்ப்புகளாலும் செம்மைப்படுத்துகின்றன என்று குறிப்பிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துகொண்டார். இந்த பூமி என்றும் உயிர்த்துடிப்புடனும், பசுமையுடனும், செழுமையுடனும் திகழ வேண்டும் என்பதே தனது உளமார்ந்த விருப்பம் என்று திரு மோடி தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
உலகைக் காக்கும் ஒளிமயமான காவலரான சவிதா தேவன் (சூரிய பகவான்) நமக்கு புனிதத்தை அளிக்கட்டும். ஒளிவீசும் விடியற்காலைப் பொழுதுகள் நமது வாழ்வில் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் வழங்கட்டும். மழைக் கடவுளான பர்ஜன்யன் நமது மக்களுக்கு நன்மையைச் சேர்க்கட்டும், மேலும் வயல்கள், பயிர்கள், நிலங்களுக்கு உரிய கருணைமிக்க இறைவன் நமக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் அருளட்டும்.
***
Release ID: 2264869
SS/IR/LDN/PD
प्रकृति की असीम कृपा, सूर्यदेव की ऊर्जा और वर्षा का पावन आशीर्वाद हम सभी के जीवन को सुख-सौभाग्य से समृद्ध करता है। मेरी कामना है कि धरती पर सदैव हरियाली और खुशहाली बनी रहे।
— Narendra Modi (@narendramodi) May 25, 2026
शं नो देवः सविता त्रायमाणः शं नो भवन्तूषसो विभातीः।
शं नः पर्जन्यो भवतु प्रजाभ्यः शं नः क्षेत्रस्य… pic.twitter.com/T2xock0Kjc