Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அனைவருக்கும் செழுமை, மகிழ்ச்சி, வளம் ஆகியவற்றை வேண்டுவதற்கான சமஸ்கிருத சுபாஷிதத்தை பிரதமர் பகிர்ந்துகொண்டார்


இயற்கையின் எல்லையற்ற கருணையும்சூரிய பகவானின் சக்தியும், மழையின் புனிதமிக்க ஆசியும் நமது வாழ்வை மகிழ்ச்சியாலும் நல்வாய்ப்புகளாலும் செம்மைப்படுத்துகின்றன என்று குறிப்பிட்டுபிரதமர் திரு நரேந்திர மோடி இன்று ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துகொண்டார். இந்த பூமி என்றும் உயிர்த்துடிப்புடனும், பசுமையுடனும், செழுமையுடனும் திகழ வேண்டும் என்பதே தனது உளமார்ந்த விருப்பம் என்று திரு மோடி தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

உலகைக் காக்கும் ஒளிமயமான காவலரான சவிதா தேவன் (சூரிய பகவான்) நமக்கு புனிதத்தை அளிக்கட்டும். ஒளிவீசும் விடியற்காலைப் பொழுதுகள் நமது வாழ்வில் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் வழங்கட்டும். மழைக் கடவுளான பர்ஜன்யன் நமது மக்களுக்கு நன்மையைச் சேர்க்கட்டும், மேலும் வயல்கள்பயிர்கள், நிலங்களுக்கு உரிய கருணைமிக்க இறைவன் நமக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் அருளட்டும்.

***

Release ID:  2264869

SS/IR/LDN/PD