Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி வாழ்த்து


அமெரிக்க அதிபராக பதவியேற்றுக் கொண்ட திரு.டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

“அமெரிக்க அதிபராகியிருக்கும் திரு. டொனால்ட் டிரம்பிற்கு என் பாராட்டுகள். அமெரிக்காவை மேலும் பல சாதனைகளை நோக்கி நடைபோட வைக்க என் வாழ்த்துகள்.

இந்திய அமெரிக்க உறவு நம் இரு நாடுகளுக்கும் பொதுவாக இருக்கும் கொள்கைகள் மற்றும் ஆர்வங்கள் சார்ந்தே இருக்கின்றது.

இந்திய-அமெரிக்க உறவை மேலும் வலுப்படுத்தி, நம் இரு நாடுகளின் ஒத்துழைப்பை முழுமையாக பயன்படுத்தும் வண்ணம் புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்,” என மோடி தெரிவித்துள்ளார்.