பி.எம்.இந்தியா
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்களுக்கான இரட்டையர் பிரிவின் இறுதி போட்டியில் திருமதி சானியா மிர்சாவும் செல்வி மார்ட்டினா ஹிங்கிசும் வெற்றி பெற்றதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் விளையாட்டு போட்டியில் நீங்கள் அபார வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துகள். உங்களின் சாதனை எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளது என்று பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Congratulations @MirzaSania & @mhingis on the phenomenal victory at the @usopen. Your accomplishments make us proud.
— Narendra Modi (@narendramodi) September 14, 2015