பி.எம்.இந்தியா
அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. அஷ்டான் கார்டரை பிரதமர் திரு. நரேந்திர மோடி தில்லியில் இன்று வரவேற்றார். இரு நாடுகளுக்கும் இடையேயான இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு திருப்திகரமாக உள்ளது. பாதுகாப்பு துறையில் “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்தில் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக முயற்சிகள் இரு நாடுகளிலும் வளர்ச்சியை கொண்டுவரும் என்று நம்புவதாக பிரதமர் அப்போது கூறினார்.
இந்தியாவை அமெரிக்கா மிக நெருங்கிய மற்றும் நீண்ட ஆழமான ஒத்துழைப்பு அளிக்கும் பங்குதாரராக கருதுகிறது என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் கார்ட்டர் குறிப்பிட்டார். நுகர்வோர் – வாடிக்கையாளர் உறவில் இருந்து உற்பத்தி பங்குதாரர்கள் உறவிற்கு இரு நாடுகளும் முன்னேறி உள்ளனர் என்றார்.
தெற்காசியா மற்றும் ஆசிய பசிபிக் மண்டலம் குறித்து இருவரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டனர். அமெரிக்காவின் “ரீபாலன்ஸ்” திட்டமும் இந்தியாவின் ஆக்ட் ஈஸ்ட் திட்டமும் ஒன்றுபோல் உள்ளதாக அமெரிக்க அமைச்சர் கார்ட்டர் கூறினார்.