பி.எம்.இந்தியா
பிரதமர் நரேந்திர மோடி, அயர்லாந்து குடியரசின் பிரதமர் என்டா கென்னிக்கு, இந்திய ஆவணக் காப்பகத்தில் இருந்த இரண்டு ஐரிஷ் அலுவலர்கள் பற்றிய தேர்ந்தெடுக்கப்பட்ட குறிப்புகள் மற்றும் ஆவணங்களின் பிரதிகளை அன்பளிப்பாக வழங்கினார்.
தாமஸ் ஓல்டுஹாம்(1816 – 1878) மற்றும் சர் ஜார்ஜ் ஏ ஆப்ரஹாம் கிரியர்சன்(1851 – 1941) ஆகியோர் இந்தியாவுக்கு அளித்த பங்களிப்பிற்கான அங்கீகாரமாக இந்த ஆவணப் பிரதிகள் வழங்கப்பட்டன.
டப்ளினில் 1816ல் பிறந்த ஓல்டுஹாம், இந்தியாவில் 1850 ம் ஆண்டு ஜியாலஜிக்கல் சர்வேயராக நியமனம் செய்யப்பட்டார். அவர் மண்ணியல் சார்ந்த கணக்கெடுப்பை நடத்தினார். பிறகு அவர் வங்காள அரசுப் பணியில் சேர்க்கப்பட்டார். அவர் சர்வேயராக நியமிக்கப்பட்ட மார்ச் 1851ம் ஆண்டு மற்றும் பணியியல் சேர்ந்த நாள் ஜியாலஜிக்கல் சர்வே ஆப் இந்தியாவின் நிறுவனர் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் உள்ள நிலக்கரி பற்றி முதல் முறைப்படுத்தப்பட்ட கணக்கெடுப்பை ஓல்டுஹாம் நடத்தினார். பிறகு மற்ற கனிமச் சுரங்கங்கள் பற்றிய வரைபடத்தையும் அவர் தயாரித்தார். இந்தியாவில் கனிம படிமங்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.
சர் ஜார்ஜ் ஏ கிரியர்சன், அயர்லாந்து ஆட்சிப் பணியாளர் மற்றும் மொழியியலாளராக இருந்தவர். 1898ல் இந்திய மொழிகள் பற்றிய கணக்கெடுப்பை செய்தார். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து 1903 – 28 ஆகிய காலகட்டத்தில் அவருடைய கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது.
இந்தோ – ஆரிய மொழிகள் பற்றிய முதல் அறிவியல்பூர்வமான பகுப்பாய்வை கிரியர்சனின் கணக்கெடுப்பு செய்துள்ளது. ஹிந்தி மொழியின் பல்வேறு வடிவங்கள், உருது மற்றும் மற்ற இந்தோ – ஆரிய மொழிகளின் பேச்சு வடிவங்களை அடிப்படையாகக் கொண்டது அவரது கணக்கெடுப்பு.
மேற்கு மற்றும் கிழக்கு பகுதிய வட்டார வழக்குகளில் இருந்து ஹிந்தி மொழியை பிரித்துக்காட்டியது கிரியர்சனின் கணக்கெடுப்பு. டப்ளின் உள்ள டிரினிடி கல்லூரியின் கணித மாணவரான கிரியர்சன், சமஸ்கிருதம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பரிசுகளை வென்றிருக்கிறார். 1873 ம் ஆண்டு வங்காளம் வந்தார். அரசுப் பணியில் 1898 வரையில் இருந்தாலும், அதிகமான நேரத்தை மொழி ஆராய்ச்சிலேயே செலவிட்டார்.
பிகாரி மொழியின் வட்டார வழக்குகள் மற்றும் துணை வட்டார வழக்குகள் பற்றிய ஏழு இலக்கணங்கள் ( 1883 – 87), பிகாரி விவசாயிகளின் வாழ்க்கை (1885) ஆகிய இரண்டும் அவருடைய முக்கியமான நூல்கள். பின்னர் மொழிகள் பற்றிய தகவல்கள், வாழ்க்கைமுறை, விவசாயப் பண்ணை நுணுக்கங்கள் மற்றும் பிகார் விவசாய மக்களின் நம்பிக்கைகள் பற்றி எழுதினார்.
இந்திய அரசு 1994ம் ஆண்டு, ஹிந்திக்கு பங்காற்றும் வெளிநாட்டு அறிஞர்களுக்கு கிரியர்சன் நினைவைப் போற்றும்விதமாக அவரது பெயரில் விருது வழஹங்கி கெளரவித்துவருகிறது.
மேலும், தூய்மையையும் அமைதியையும் குறிக்கும் மரத்திலான வட்டவடிவ கைவினைப் பொருளில் ஐரிஷ் சின்னமும். மயில் சிற்பமும் அமைக்கப்பட்ட பரிசையும் பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்.
Presented reproductions of selected manuscripts & papers from the National Archives of India to Mr. @EndaKennyTD. pic.twitter.com/t9E18ia5pI
— Narendra Modi (@narendramodi) September 23, 2015
The selection is connected with Irish officials, Mr.Thomas Oldham & Sir George Abraham Grierson, recognising their contribution to India.
— NarendraModi(@narendramodi) September 23, 2015
Thomas Oldham was appointed geological surveyor in 1850. His joining day in 1851 is marked as foundation day of Geological Survey of India.
— NarendraModi(@narendramodi) September 23, 2015
Mr.Oldham conducted 1st systemic coal mapping of India & later initiated mapping of other minerals. He wrote a lot about fossils in India.
— NarendraModi(@narendramodi) September 23, 2015
Sir George A Grierson conducted the 1st linguistic survey of India, which was published over several years between 1903 to 1928.
— NarendraModi(@narendramodi) September 23, 2015
Grierson’s Linguistic Survey of India provided 1st scientifically based taxonomy of Indo-Aryan languages. pic.twitter.com/OdEqIkjeX8
— NarendraModi(@narendramodi) September 23, 2015
Also presented Mr.@EndaKennyTD a specially handcrafted piece of silver marble and roughly hewn sandstone rock. http://t.co/d2Bw6rJR59
— NarendraModi(@narendramodi) September 23, 2015