பி.எம்.இந்தியா
மெல்பெர்னில் 2026 ஜூலை 9 அன்று நடைபெற்ற ஆஸ்திரேலியா – இந்தியா தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டமைப்பு, பொருளாதார வழிவகை வர்த்தக நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஆண்டனி அல்பானீஸூம் கூட்டாக உரையாற்றினார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளில் இந்தியா – ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னணி தலைமைச் செயல் அதிகாரிகள், வர்த்தகத் தலைவர்கள், முக்கிய ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதிகள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் பிரதிநிதிகள், முன்னணி ஆஸ்திரேலிய பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு மோடி, இந்தியாவின் வலுவான பொருளாதார வளர்ச்சி, கொள்கை சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மாற்றம், விரிவடைந்து வரும் புதுமை கண்டுபிடிப்புச் சூழல் ஆகியவை ஆஸ்திரேலிய கூட்டாளர்களுக்கு புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கியதாகத் தெரிவித்தார். இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதாரங்களுக்கு இடையேயான பரஸ்பர தன்மை குறித்து குறிப்பிட்ட பிரதமர் திரு மோடி, உற்பத்தி, தூய்மை எரிசக்தி, முக்கிய கனிமங்கள், உள்கட்டமைப்பு, நகர்ப்புற மேம்பாடு, விமானப் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, பின்டெக், உணவுப் பதனப்படுத்துதல், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவில் பெரும் வாய்ப்புகள் உள்ளதாக சுட்டிக்காட்டினார். இந்தியாவின் பரவலான செயல்பாடும், ஆஸ்திரேலியாவின் நிபுணத்துவமும் இருதரப்புக்கும் வெற்றி வாய்ப்பை உருவாக்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள நீண்டகால முதலீடுகளுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் திரு மோடி அழைப்பு விடுத்தார். இந்தியாவில் அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களின் வாய்ப்புகளை அவர் வரவேற்றார். உயர்கல்வி, ஆராய்ச்சி, புதுமைகண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு, ஆகியவற்றில் வலுவான ஒத்துழைப்பு, இருநாடுகளில் உள்ள திறமையாளர்களை எதிர்காலத்திற்கு தயார்படுத்துவதோடு மட்டுமின்றி உலகளாவிய வாய்ப்புகளை பயன்படுத்தவும் அவர்களுக்கு உதவும் என்று கூறினார்.
தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்திற்குப் பின் பிரதமர் திரு மோடி பொருளாதார வழிவகை வர்த்தக நிகழ்விலும் உரையாற்றினார். இதில் இருதரப்பிலிருந்தும் 200-க்கும் மேற்பட்ட தலைமைச் செயல் அதிகாரிகளும் வர்த்தகத் தலைவர்களும் பெருமளவில் பங்கேற்றனர். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் 2022-ன் அடிப்படையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டில் வளர்ந்து வரும் சூழல் குறித்து திருப்தி தெரிவித்த அவர், பரிந்துரைக்கப்பட்ட விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். அதன் மூலம் வளர்ந்து வரும் வணிக உறவை புதிய நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று கூறினார்.
அரியவகை கனிமங்கள், லித்தியம், மின்கலன்கள், மின்னணுப் பொருட்கள், மின்சார வாகனங்கள், செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் இருதரப்பிலும் உள்ள சாதகங்களைப் பயன்படுத்தி உலகளாவிய தீர்வுகளைக் காணுமாறு வர்த்தகத் தலைவர்களை அவர் கேட்டுக் கொண்டார். இருதரப்பு வர்த்தக உறவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் வகையில் இந்திய மாநிலங்களும் ஆஸ்திரேலிய மாகாணங்களும் தங்களுடைய முக்கிய திறன்களின் அடிப்படையில் பொருளாதார கூட்டாண்மைகளை ஏற்படுத்துவது அவசியம் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282668®=3&lang=1
***
SS/IR/KPG/KR
India's growth story presents immense opportunities for Australian businesses. Together, we can build trusted and future-ready partnerships. https://t.co/SpniY4kdLB
— Narendra Modi (@narendramodi) July 9, 2026
Addressed the Australia-India CEO Forum in Melbourne this morning. Since 2023, this forum has gained remarkable momentum, reflecting the growing confidence in our economic partnership.
— Narendra Modi (@narendramodi) July 9, 2026
I thank PM Anthony Albanese for joining the interaction and sharing his vision for taking our… pic.twitter.com/6GDcsAkJUv