Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அரசு மின்னணு சந்தைப் பகுதி என்ற பெயரில் சிறப்பு துணை நிறுவனத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கீழ்க்காணும் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

1. அரசு மின்னணு சந்தைப் பகுதி என்ற பெயரில் சிறப்பு துணை நிறுவனம் அமைக்கப்படும். மத்திய, மாநில அரசு நிறுவனங்களுக்குத் தேவையான சரக்கு மற்றும் சேவைகளை கொள்முதல் செய்வதற்காக நிறுவனங்கள் சட்டம் 2013-ன் கீழ், நிறுவனங்கள் பதிவுப் பிரிவு 8-ன்படி, தேசிய பொது கொள்முதல் வலைதளம் அமைக்கப்படும். அரசு மின்னணு சந்தைப் பகுதி என்பது ஆன்லைன் முறையிலான சந்தைப் பகுதியாக இருக்கும். இதன்மூலம், மத்திய, மாநில அரசுகளின் அமைச்சகங்கள்/துறைகள், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொதுவான பயன்பாட்டுக்கான சரக்கு மற்றும் சேவைகள் வெளிப்படையான மற்றும் திறமையான முறையில் கொள்முதல் செய்யப்படும்.

2. விநியோகம் மற்றும் விற்பனை இயக்குநரகத்தின் (DGS&D) செயல்பாடுகள் அக்டோபர் 31, 2017-ல் முடிவுக்கு வரும். விநியோகம் மற்றும் விற்பனை இயக்குநரகத்தை அக்டோபர் 31, 2017-க்குள் மூட முடியாவிட்டால், இதனை மூடுவதற்கான தேதியை உரிய காரணங்களுடன் மார்ச் 31, 2018 வரை துறை ஒத்திவைக்கலாம்.