Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை சிந்தனை துறைகளில் இந்தியாவுக்கும் பிரான்ஸ் நாட்டுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்து மத்திய அமைச்சரவையில் தகவல் தெரிவிப்பு


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய அரசின் தகவல் & தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்துக்கும் (TDB), பிரான்ஸ் நாட்டில் பொதுத் துறை முதலீட்டு வங்கி ஒன்றுக்கும் இடையில் கையெழுத்திடப் பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

பிரான்ஸ் மற்றும் இந்தியாவின் கம்பெனிகள், நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிலையங்களுக்கு இடையில் கூட்டு முயற்சி மூலம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை சிந்தனைகள் துறைகளில் தொழில்நுட்ப பரிமாற்றங்களை வளர்ப்பதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகளை உருவாக்குவது மற்றும் சிறந்த நடைமுறைகள் பரிமாறப்படுவதை இந்த ஒப்பந்தம் உறுதி செய்யும்.

அறிவியல் & தொழில்நுட்பத் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் மற்றும் BPI பிரான்ஸ் மூலமாக சிறந்த நடைமுறைகள் பரிமாறப்படுவது தொடர்பான செயல்பாடுகளைச் செய்வதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.