பி.எம்.இந்தியா
அஸ்தானாவில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கஜகிஸ்தான், சீனா, உஸ்பெக்கிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இருதரப்பு உறவு குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் சந்தித்துப் பேசினார்.
கஜகிஸ்தானின் அதிபர் திரு. நூர்சுல்தான் நாசர்பாய் – வை சந்தித்த பிரதமர், 2017-18 ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அமைப்பில் கஜகிஸ்தான் உறுப்பினரானதற்கு பாராட்டினார். பிரதமர் மோடியை அன்புடன் வரவேற்ற அதிபர் நாசர்பாய்வ், 2015 –ல் பிரதமர் கஜகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டதை நினைவு கூறினார். அந்தப் பயணத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான வளர்ச்சி குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். தற்போது கஜகிஸ்தான் இந்தியாவுக்கு அதிக அளவு யுரேனியம் வழங்கி வருகிறது. இந்த வர்த்தக உறவை தொடர்ந்து மேற்கொள்ள இருதரப்பும் ஒப்புக் கொண்டன. ஹைட்ரோ கார்பன் துறையில் ஒத்துழைப்பு மேற்கொள்வது குறித்தும் சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டது.
சர்வதேச சூரிய ஒளிசக்தி குழுமத்தில் உறுப்பினராக கஜகிஸ்தான் இணையப் பிரதமர் அழைப்பு விடுத்தார். போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதன் அடிப்படையில் ஈரானில் உள்ள சபாகார் துறைமுகம் மூலம் இணைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது. தில்லி மற்றும் அஸ்தானா இடையே விரைவில் விமான வசதி கொண்டுவரப்படும்.
சீன அதிபர் திரு. ஜி ஜின்பிங்கை – ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டிற்கு இந்தியாவை வரவேற்றதற்காகப் பிரதமர் அவருக்கு நன்றி தெரிவித்தார். பன்முகத் தன்மை கொண்ட இவ்வுலகில் இந்தியா, சீனா இடையேயான உறவு திடத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இரு நாடுகளும் இணைந்து பணிபுரிவது அவசியம் என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். வர்த்தகம், முதலீடு, இணைப்பு, இளைஞர்கள் நலன், கலாச்சாரப் பரிமாற்றம் ஆகிய தலைப்புகளும் விவாதிக்கப்பட்டன.
உஸ்பெகிஸ்தான் அதிபர் திரு. சவுகாத் மிர்சியோயவ் – ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்தார். பொருளாதாரம், வர்த்தகம், சுகாதாரம் ஆகிய துறைகளில் வலுவான உறவை ஏற்படுத்திக் கொள்வது குறித்தும் இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.
****
Began my programmes in Astana with a productive meeting with President Nursultan Nazarbayev of Kazakhstan. pic.twitter.com/a1HP1bOoJ2
— Narendra Modi (@narendramodi) June 8, 2017
Met President Xi Jinping. We spoke about India-China relations and how to further improve ties. pic.twitter.com/67aPIi6GFF
— Narendra Modi (@narendramodi) June 9, 2017
Held talks with President Shavkat Mirziyoyev. We discussed ways to boost India-Uzbekistan relations, especially economic cooperation. pic.twitter.com/kc3wFqSqyA
— Narendra Modi (@narendramodi) June 9, 2017