Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அஸ்ஸாமைச் சேர்ந்த ஏழை விவசாயி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் காப்பாற்றப்பட்டுள்ளார்


அஸ்ஸாமைச் சேர்ந்த 35 வயதாகும் ஏழை நெல் விவசாயியான துவிஜென் கலிதா, கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். காம்ரூப் மாநகர மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட போது, பாதியளவு சுயநினைவை இழந்திருந்ததோடு, வலியால் துடித்துக் கொண்டிருந்தார்.  விரிவான ஆய்வுகளுக்குப் பிறகு, அவருக்கு தலையில் ரத்தக்கட்டி இருப்பதும், அதற்கு மண்டையோடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதும் தெரியவந்தது.

கலிதாவின் பொருளாதார நிலைமையில், இதற்கான செலவுகளை ஏற்றுக்கொள்வது அவரது குடும்பத்தினருக்கு சாத்தியமற்றதாக இருந்தது.

 

 

PM India

 

எனினும், ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின்கீழ், அவருக்கு இலவச சிகிச்சை அளிக்க முடியும் என தெரிவிக்கப்பட்ட பிறகே அவரது குடும்பத்தினருக்கு உண்மையான நம்பிக்கை பிறந்தது.  

      தம்மைப்போன்ற ஏழைகளுக்கு இத்திட்டம் ஒரு வரப்பிரசாதம் என கலிதா கூறுகிறார்.

 

 

PM India

 

 

தற்போது அவர் ஆரோக்கியமான மனிதராக இருப்பதுடன், உலகின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் வெற்றி குறித்து எடுத்துரைக்க பிரதமரை சந்தித்த 31 பயனாளிகளில் ஒருவராவார்.

     ஓராண்டுக்கு முன்பு 2018-ல் தொடங்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான ஆயுஷ்மான் பாரத், நாட்டிலுள்ள 10.74 கோடிக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு எளிதில் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்துள்ளது.

     கடந்த ஓராண்டில் மட்டும், துவிஜென் கலிதா போன்ற 50,000-க்கும் மேற்பட்ட நோயாளிகள், அவர்களது மாநிலத்திற்கு வெளியேயும் சிறப்பான மருத்துவ வசதிகளைப் பெறுவதற்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் வழிவகை செய்துள்ளது.

     ஆயுஷ்மான் பாரத், பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டத்தின்கீழ், 16,085 மருத்துவமனைகள் சேர்க்கப்பட்டு, 41 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பதுடன், 10 கோடிக்கும் மேற்பட்ட மின்னணு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன.

     ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 20,700-க்கும் மேற்பட்ட சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.    

******