Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 46 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற ரிங்கு ஹூடாவிற்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 46 பிரிவில், 65.11 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து  தங்கப் பதக்கம் வென்ற ரிங்கு ஹூடாவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரிங்கு ஹூடாவின் இந்தச் சிறப்பான செயல்பாடு, அவரது ஒழுக்கத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, அவர் தொடர்ந்து வெற்றி பெறவும், மேலும் பல புதிய உயரங்களை எட்டவும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:

“ரிங்கு ஹூடாவுக்கு ஒரு மகத்தான சாதனை! ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2026-ல், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எஃப் 46 பிரிவில், 65.11 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து, இந்தத் தொடரிலேயே தனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் மூலம் ரிங்கு தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்! அவரது இந்த அபாரமான செயல்பாடு, அவரது ஒழுக்கத்தையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகிறது. அவர் மேலும் பல புதிய உயரங்களை எட்ட வாழ்த்துகள்! – பிரதமர் @narendramodi”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325317&reg=3&lang=1

****

AD/RB/RJ