ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 100 மீட்டர் ஓட்டத்தில் டி35 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அனுபவ் சௌத்ரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (21.10.2026) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது மறக்க முடியாத முதல் போட்டி எனவும், அவரது பயணத்திற்கு ஒரு சிறப்பான தொடக்கத்தைக் குறிப்பதாகவும் கூறியுள்ள திரு நரேந்திர மோடி, இந்த அற்புதமான சாதனைக்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, இது அவரது விளையாட்டு வாழ்க்கையில் இன்னும் பல மைல்கற்களுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“மறக்க முடியாத அறிமுகப் போட்டி, தனிப்பட்ட சிறந்த சாதனை!
அனுபவ் சௌத்ரி, ஆடவர் 100 மீட்டர் டி35 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று, தமது ஆசிய பாரா விளையாட்டுப் பயணத்தை அற்புதமாகத் தொடங்கியுள்ளார். இந்த அற்புதமான சாதனைக்காக அவருக்கு வாழ்த்துகள். இது அவரது விளையாட்டு வாழ்க்கையில் இன்னும் பல மைல்கற்களை எட்ட வழிவகுக்கட்டும்: பிரதமர் நரேந்திரமோடி”
(Release ID : 2326093)
****
TV/PLM/SH
A memorable debut and a personal best! Anubhav Choudhary has made an impressive start to his Asian Para Games journey, winning Bronze in the Men's 100m T35 event with an impressive timing. Congratulations to him on this wonderful achievement. May this lead to many more milestones in his sporting career: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 21, 2026