ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026-ன் மகளிர் வட்டு எறிதல் எஃப்54 பிரிவில் சிறப்பான வெற்றியைப் பெற்ற ஸ்வர்ணா ராஜுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார்.
ஸ்வர்ணா ராஜுவின் இந்த வெற்றி, அவருடைய கடின உழைப்பு, விடாமுயற்சி, விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் விளைவு என்று குறிப்பிட்டுள்ள திரு மோடி, இந்த சிறப்பான வெற்றியை இந்தியா கொண்டாடுவதாவும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2026-ன் மகளிர் வட்டு எறிதல் எஃப்54 பிரிவில் சிறப்பான வெற்றியைப் பெற்ற ஸ்வர்ணா ராஜுக்கு வாழ்த்துகள். அவருடைய வெற்றி கடின உழைப்பு, விடாமுயற்சி, விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்ற அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றின் விளைவாகும். இந்த சிறப்பான வெற்றியை இந்தியா கொண்டாடுகிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.”
(Release ID: 2326689)
****
SK/IR/RJ/SH
Congratulations to Suvarna Raj on her magnificent victory in the Women's Discus Throw F54 event at the Asian Para Games 2026! Her success is the result of her hard work, perseverance and unwavering commitment to sporting excellence. India celebrates this wonderful triumph. Best wishes for the endeavours ahead: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 22, 2026