ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், டேபிள் டென்னிஸ் ‘கலப்பு இரட்டையர் பிரிவில்’ வெண்கலப் பதக்கம் வென்ற பவினா படேல் – சுபம் வாத்வா இணைக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார். இந்தப் போட்டியில் ‘கலப்பு இரட்டையர்’ பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். இது இந்திய பாரா டேபிள் டென்னிஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இவர்களின் குழுப்பணி, அர்ப்பணிப்பு, மன உறுதி ஆகியவை நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளன என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், இந்த அற்புதமான சாதனையைப் படைத்த இரு விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், அவர்கள் மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
“இந்திய பாரா டேபிள் டென்னிஸ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்!
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், டேபிள் டென்னிஸ் ‘கலப்பு இரட்டையர்’ பிரிவில், பவினா படேல் – சுபம் வாத்வா இணை வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இந்தப் போட்டியில் ‘கலப்பு இரட்டையர்’ பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.
இவர்களின் குழுப்பணி, அர்ப்பணிப்பு, மன உறுதி ஆகியவை நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளன.
இந்த அற்புதமான சாதனையைப் படைத்த இரு விளையாட்டு வீரர்களுக்கும் வாழ்த்துகள். அவர்கள் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்: பிரதமர்”
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2326742®=3&lang=1
(Release ID: 2326742)
****
TV/SV/SH
A historic first for Indian Para Table Tennis! Bhavina Patel and Shubham Wadhwa have won Bronze in the Mixed Doubles Class XD7 event at the Asian Para Games 2026, securing India's first-ever medal in Mixed Doubles at the Games. Their teamwork, dedication and determination have brought pride to the nation. Congratulations to both athletes on this wonderful milestone. Wishing them continued success: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 22, 2026