2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 100 மீட்டர் பிரீஸ்ட்ஸ்ட்ரோக் நீச்சல் எஸ்பி9 பிரிவில் தனது சிறப்பாக நீந்தி வெண்கலப் பதக்கம் வென்ற ஸ்வாதிக் பாட்டீலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தச் சிறந்த சாதனை அவரது திறமை, அர்ப்பணிப்பு, தொடர்ச்சியான முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டுள்ள திரு நரேந்திர மோடி, அவரது விளையாட்டுப் பயணம் தொடர்ந்து வெற்றிபெற தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
“ஸ்வாதிக் பாட்டீல் சிறப்பான நீச்சல் திறனை வெளிப்படுத்தியுள்ளார்! 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், ஆடவர் 100 மீட்டர் பிரீஸ்ட்ஸ்ட்ரோக் எஸ்பி9 பிரிவில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த மகத்தான சாதனை, அவரது திறமை, அர்ப்பணிப்பு, தொடர்ச்சியான முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது. ஸ்வாதிக் தமது விளையாட்டுப் பயணத்தில் தொடர் வெற்றிகளைப் பெற எனது நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திர மோடி”
(Release ID : 2327015)
TV/PLM/SH
Excellent swimming by Swatik Patil! He has won the Bronze Medal in the Men’s 100m Breaststroke SB9 event at the Asian Para Games 2026. This fine achievement reflects his discipline, dedication and sustained efforts. My best wishes to Swatik for continued success in his sporting journey: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 22, 2026