ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் நீளம் தாண்டுதல் (டி47) பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்ற நிமிஷா சக்குங்கல்பரம்பில் சுரேஷிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்தார்.
அவரது அர்ப்பணிப்பும், கடின உழைப்பும், இந்திய பாரா தடகள விளையாட்டுக்கு, மீண்டும் ஒரு பெருமைமிக்க தருணத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட பிரதமர், அவர் தொடர்ந்து சிறந்து விளங்கி, மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்று வாழ்த்தினார். மேலும், எதிர்காலத்தில் நடைபெறும் போட்டிகளிலும், அவர் சிறந்து விளங்கட்டும் என்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், மகளிர் நீளம் தாண்டுதல் (டி47) பிரிவில், வெள்ளிப் பதக்கம் வென்ற நிமிஷா சக்குங்கல்பரம்பில் சுரேஷிற்கு வாழ்த்துகள்! அவரது அர்ப்பணிப்பும், கடின உழைப்பும், இந்திய பாரா தடகள விளையாட்டுக்கு மீண்டும் ஒரு பெருமைமிக்க தருணத்தைக் கொண்டு வந்துள்ளன. அவர் தொடர்ந்து சிறந்து விளங்கி, மேலும் பல வெற்றிகளைப் பெற வேண்டும். எதிர்காலத்தில் நடைபெறும் போட்டிகளிலும் அவர் சிறந்து விளங்க வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”.
***
(Release ID: 2327741)
AD/SV/RJ
Congratulations to Nimisha Chakkungalparambil Suresh on winning Silver in the Women’s Long Jump T47 event at the Asian Para Games! Her dedication and hard work have brought another proud moment for Indian para athletics. May she continue to shine and achieve greater success. Wishing her the very best for future competitions: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 23, 2026