ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 200 மீட்டர் ஓட்டம் டி37 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ராகேஷ்பாய் பட்டுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தத் தொடரில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று அவர் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார் என்று கூறியுள்ள திரு நரேந்திர மோடி, அவர் தொடர்ந்து சிறந்து விளங்கி மேலும் பல மைல்கற்களை எட்டுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளதோடு, வரும் ஆண்டுகளிலும் அவர் தொடர் வெற்றி பெற வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 200 மீட்டர் ஓட்டத்தில் டி37 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ராகேஷ்பாய் பட்–க்கு வாழ்த்துகள்! இந்தத் தொடரில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று, அவர் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். அவர் தொடர்ந்து சிறந்து விளங்கி, மேலும் பல மைல்கற்களை எட்ட வாழ்த்துகிறேன். வரும் ஆண்டுகளில் அவர் தொடர்ந்து வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்: பிரதமர் @narendramodi”
***
(Release ID: 2327736)
AD/PLM/RJ
Congratulations to Rakeshbhai Bhatt on winning Bronze in the Men’s 200m T37 event at the Asian Para Games! With two Bronze medals in this edition, he has made the country proud. May he continue to excel and achieve many more milestones. Wishing him continued success in the years ahead: PM @narendramodi
— PMO India (@PMOIndia) October 23, 2026