Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹிமான்ஷு நந்தலுக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் நீச்சல் எஸ்11 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹிமான்ஷு நந்தலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தத் தொடரில் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று, அவர் அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ள திரு நரேந்திர மோடி, அவர் தொடர்ந்து சிறந்து விளங்கி மேலும் பல வெற்றிகளை அடைய வேண்டும் என தெரிவித்துள்ளதோடு, அவரது எதிர்காலப் பயணத்திற்கு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 100 மீட்டர் ஃப்ரீஸ்டைல் எஸ்11 பிரிவில் வெண்கலம் வென்ற ஹிமான்ஷு நந்தலுக்கு வாழ்த்துகள்! இந்தத் தொடரில் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்று, அவர் அபாரமான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தொடர்ந்து சிறந்து விளங்கி மேலும் பல வெற்றிகளை அடைய வாழ்த்துகிறேன். அவரது எதிர்காலப் பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”

***

(Release ID: 2327733)

AD/PLM/RJ