பி.எம்.இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 65 கிலோ குத்துச்சண்டை பிரிவில் கடும் போட்டி நிறைந்த இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்ற பர்வீனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பர்வீனின் இந்தச் சாதனை இந்தியக் குத்துச்சண்டை வரலாற்றில் மற்றொரு சிறப்பான அத்தியாயத்தைச் சேர்த்துள்ளதாகப் பிரதமர் குறிப்பிட்டார். அவரது வெற்றி, மிகுந்த ஊக்கமளிப்பதாகவும், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
வருங்காலத்தில் பர்வீனின் முயற்சிகளுக்கும் திரு மோடி தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டதாவது:
“அற்புதமான தங்கப் பதக்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 65 கிலோ குத்துச்சண்டை பிரிவில் கடும் போட்டி நிறைந்த இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்ற பர்வீனுக்கு வாழ்த்துகள். இந்தியக் குத்துச்சண்டை வரலாற்றில் மற்றொரு சிறப்பான அத்தியாயத்தைச் சேர்க்கும் வகையில் அவரது வெற்றி அமைந்துள்ளது. இந்த வெற்றி மிகுந்த ஊக்கமளிப்பதாக அமைவதுடன், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துகிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்: பிரதமர் @narendramodi”
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318269®=3&lang=1
***
TV/RB/RJ
A magnificent Gold!
— PMO India (@PMOIndia) October 2, 2026
Congratulations to Parveen on winning the Women’s 65kg Boxing Gold at the Asian Games after a hard-fought final. Hers is a remarkable achievement that adds another glorious chapter to Indian boxing. Her success is deeply motivating and highlights her…