Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் ரிகர்வ் வில்வித்தை தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற குங்கும் அனில் மொஹோத்துக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ரிகர்வ் வில்வித்தை தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்ற குங்கும் அனில் மொஹோத்துக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது நிதானம் சிறப்பாக இருந்தது என்று பிரதமர் கூறியுள்ளார்.

குங்கும் அனில் மொஹோத்தின் தொடர் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, அவரது எதிர்கால முயற்சிகளுக்கும் பிரதமர் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“என்றும் நினைவில் நிற்கும் ஒரு தங்கப் பதக்கம்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ரிகர்வ் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்ற குங்கும் அனில் மொஹோத்திற்கு வாழ்த்துகள். ஷூட்-ஆஃப் சுற்றில் அவரது நிதானம் சிறப்பாக இருந்தது. அவர் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகள்! அவரது எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்: பிரதமர் நரேந்திரமோடி”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2318676&reg=48&lang=1

****

TV/PLM/RJ