பி.எம்.இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இது இந்திய கிரிக்கெட்டிற்கு சிறப்பான வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நம்பிக்கை, திறன், மிகச் சிறப்பான அணி ஒருங்கிணைப்பு ஆகியவற்றுடன் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக பிரதமர் கூறியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தமது முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அணி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாகவும், நாட்டிலுள்ள எண்ணற்ற இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இது உத்வேகம் அளிக்கும் என்றும் தெரிவித்துள்ள அவர் அந்த அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:
“ இந்திய கிரிக்கெட்டிற்கு சிறப்பான வெற்றி!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நமது மகளிர் கிரிக்கெட் அணிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
நம்பிக்கை, திறன், மிகச் சிறப்பான அணி ஒருங்கிணைப்பு ஆகியவற்றுடன் சிறந்த ஆட்டத்தை அந்த அணி வெளிப்படுத்தியுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தமது முதலாவது தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளது
இந்த அணி நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதுடன், நாட்டிலுள்ள எண்ணற்ற இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு, உத்வேகம் அளிக்கும் வகையிலும் திகழ்கிறது.
நமது மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகள் ”
***
Release ID: 2313381
SS/IR/PS/SH
A splendid triumph for Indian cricket!
— PMO India (@PMOIndia) September 22, 2026
Heartiest congratulations to our Women’s Cricket Team on winning the Gold medal at the Asian Games. It was a commanding performance at the Games, marked by confidence, skill and wonderful teamwork.
This victory also brings India its first… pic.twitter.com/oZI9Uoyp6I