Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்புத் தற்காப்பு கலைப் பிரிவில் வெண்கலம் வென்ற சுச்சிகா தரியலுக்கு பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்புத் தற்காப்பு கலைப் பிரிவில் வெண்கலம் வென்ற சுச்சிகா தரியலுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்து, இது இந்தியாவுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்பிரிவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை அவர் வென்றுள்ளார் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். அவருடைய அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் உள்ள இச்சாதனை மிகவும் சிறப்பானது என்று குறிப்பிட்டுள்ள அவர், எதிர்காலத்தில் அவர் பல வெற்றிகளைப் பெற வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:

“ இந்தியாவுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்புத் தற்காப்பு கலைப் பிரிவில் வெண்கலம் வென்று, இப்பிரிவில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்த சுச்சிகா தரியலுக்கு வாழ்த்துகள்.

அவருடைய அர்ப்பணிப்பு, ஆர்வம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் உள்ள இச்சாதனை மிகவும் சிறப்பானது

எதிர்காலத்தில் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள் ”

***

Release ID: 2313375

SS/IR/PS/SH