பி.எம்.இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் மகளிர் ஸ்கீட் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற பரினாஸ் தலிவால், மகேஸ்வரி சௌகான், ரைசா தில்லான் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அவர்களுடைய கவனம், துல்லியம், அணி ஒருங்கிணைப்பு ஆகியவை இந்திய விளையாட்டுத் துறைக்கு மற்றொரு பெருமைமிகு தருணத்தை அளித்துள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கும் அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பகிர்ந்திருப்பதாவது:
“மகளிர் ஸ்கீட் பிரிவில், வெண்கலப் பதக்கம் வென்ற பரினாஸ் தலிவால், மகேஸ்வரி சௌகான், ரைசா தில்லான் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
அவர்களுடைய கவனம், துல்லியம், அணி ஒருங்கிணைப்பு ஆகியவை இந்திய விளையாட்டுத் துறைக்கு மற்றொரு பெருமைமிகு தருணத்தை அளித்துள்ளது. அவர்களுடைய எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.”
***
Release ID: 2313775
SS/IR/SM/GS
Congratulations to Parinaaz Dhaliwal, Maheshwari Chauhan and Raiza Dhillon on winning the Bronze Medal in the Women’s Skeet Team event.
— PMO India (@PMOIndia) September 23, 2026
Their focus, precision and teamwork have brought another proud moment for Indian sports. Best wishes to them for their upcoming endeavours: PM…