Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் டிராப் துப்பாக்கி சுடுதல் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மனிஷா கீர், நீரு, ஆஷிமா அலாவத் ஆகியோருக்குப் பிரதமர் வாழ்த்து


ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் டிராப் துப்பாக்கி சுடுதல் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மனிஷா கீர், நீரு, ஆஷிமா அலாவத் ஆகியோருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

அவர்களின் சிறப்பான செயல்பாடுகளை, துல்லியம், கவனம், குழுப்பணி ஆகியவற்றின் பாராட்டத்தக்க வெளிப்பாடு என்று பிரதமர் விவரித்துள்ளார்.

 

அவர்களுக்குத் தொடர் வெற்றி கிடைக்க பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளதோடு, அவர்கள் இந்தியாவிற்கு மேலும் பல பெருமைகளைக் கொண்டு வருவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

 

“ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் டிராப் துப்பாக்கி சுடுதல் குழுப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மனிஷா கீர், நீரு, ஆஷிமா அலாவத் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

 

இது துல்லியம், கவனம், குழுப்பணி ஆகியவற்றின் பாராட்டத்தக்க வெளிப்பாடாக இருந்தது. இந்த அணியினர் தொடர்ந்து சிறந்து விளங்கி, இந்தியாவிற்கு மேலும் பல பெருமைகளைக் கொண்டுவரட்டும்: பிரதமர் நரேந்திரமோடி”

 

(Release ID: 2316643)

****

TV/PLM/SH