பி.எம்.இந்தியா
ஆட்கடத்தல் குற்றங்களை தடுத்து அவற்றுக்கு எதிராக இந்தியாவும் ஐக்கிய அரபு எமிரேட்டும் (யு.ஏ.இ.) இணைந்து செயல்படும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நட்புறவை பலப்படுத்துவதுடன், ஆட்கடத்தல் தொடர்பான விவகாரங்களில் சிக்குபவர்களைக் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதை தடுப்பது, மீட்பது, மற்றும் திருப்பி அனுப்புவது போன்றவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிக்கும்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்கள் வருமாறு :
1. அனைத்து வகையான ஆட்கடத்தல் குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுக்கப்படுவதை தடுப்பதற்கான ஒத்துழைப்பை பலப்படுத்துவதுடன், விசாரணைகளை துரிதப்படுத்துவது உறுதி செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவதுடன், இரு நாடுகளிலும் அது தொடர்பான அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுப்பது.
2. பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்படுவதை அகற்றும் வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், ஆட்கடத்தலில் பாதிக்கப்படுபவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது.
3. ஆட்கடத்தலைத் தடுக்கும் வகையில் இரு தரப்பிலும் ஆட் கடத்தலுக்கு எதிரான குழுக்கள் மற்றும் பணிக் குழுக்கள் பணியாற்றும்.
4. காவல்துறை மற்றும் இதர சம்பந்தப்பட்ட அமைப்புகள் நெருக்கமான ஒத்துழைப்புடன் செயல்பட்டு, ஆட் கடத்தலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப் பயன்படத்தக்க தகவல்களை பரிமாறிக் கொள்ளும்.
5. ஆட்கடத்தலில் பாதிக்கப்படுபவர்கள் இயன்ற வகையில் விரைவாக திருப்பியனுப்பப்படுவதுடன், அவர்களின் தாய்நாடு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மீண்டும் இணைவதற்கான நடவடிக்கைகள் பாதுகாப்பாகவும் சிறந்த முறையிலும் எடுக்கும்.
6 இரு தரப்பினரும் கொண்ட கூட்டுப் பணிக் குழுக்கள் அமைக்கப்பட்டு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவது கண்காணிக்கப்படும்.
பின்னணி :
தெற்காசிய நாடுகளை இலக்காகக் கொண்டு உள்நாட்டு மற்றும் அண்டை நாடுகளில் இருந்து ஆட்களைக் கடத்துவது அதிக அளவில் நடப்பதால் இந்த நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. எனினும் தெற்காசியாவில் பாதிக்கப்பட்டவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்படுகின்றனர்.
ஐக்கிய அரபு எமிரேட்களைப் பொறுத்தவரையில் ஆட்கடத்தலுக்கான ஆதாரமாகவும் வழித்தடமாகவும் இந்தியா உள்ளது. மேலும் இது கடத்தப்படும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான செல்லுமிடமாகவும் வழித்தடமாகவும் உள்ளது. தெற்கு, தென்கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் இருந்தும், கிழக்கு ஐரோப்பாவில் இருந்தும் இவர்கள் கடத்தப்பட்டு வந்து கொத்தடிமைத் தொழிலாளர்களாகவும் பாலியல் தொழிலுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் தனியார் துறையில் கூலி தொழிலாளர்களாக உள்ள 95 சதவிகிதமாக உள்ள குடிபெயர்ந்தவர்கள் எத்தியோபியா, எரித்ரியா, ஈரான் மற்றும் கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் இருந்து வரவழைக்கப்படுகின்றனர். இவர்களில் சிலர் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் கொத்தடிமைத் தொழிலாளர்களாக உள்ளனர். இந்த நாடுகளைச் சேர்ந்த பெண்கள் சிலர் ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் வீட்டுப் பணிகள் செய்வது, செயர்களாக இருப்பது, அழகுகலை நிபுணர்களாக, விடுதிகளை சுத்தப்படுத்துவோராக பணிபுரிய தாங்களாகவே முன் வருகின்றனர். இவர்களில் சிலர் கூலித்தொழிலாளர்களாக இருக்க கட்டாயப்படுத்தப்படுவதுடன், அவர்களது பாஸ்போர்ட்டுகள் கையகப்படுத்தப்பட்டு, அவர்களது நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்படுவது, ஊதியம் அளிக்கப்படாமல் இருப்பது மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவது போன்றவை நடைபெறுகின்றன..
ஆட்கடத்தல் தடுப்பு முயற்சிகளை உறுதியாக மேற்கொள்ளப்படுவது, பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டியது இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்டுகளுக்கு இடையே மிகவும் அவசியமாகிறது. இதற்கு இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. இதன் மூலம் புலனாய்வு தகவல்கள் பரிமாற்றம், கூட்டு விசாரணைகள் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பதற்கான சவால்களை கூட்டாக எதிர்கொள்ளும் முறை தேவைப்படுகிறது. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஐக்கிய அரபு எமிரேட்டுகளுடன் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆட்கடத்தலைத் தடுக்க நாம் ஏற்கெனவே வங்கதேசம் மற்றும் பஹ்ரைன் ஆகியவற்றுடன் இத்தகைய ஒப்பந்தங்களை செய்து கொண்டுள்ளோம்.