Search

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆபரேஷன் சிந்துரின் போது ஆயுதப் படைகளின் வீரத்தை எடுத்துரைக்கும் வகையில் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்


‘ஆபரேஷன் சிந்துர்‘ நடவடிக்கையில் இந்தியா பெற்ற மகத்தான வெற்றி என்பது, நாட்டின் வீரம் செறிந்த படைவீரர்களின் நிகரற்ற துணிவுக்கும் தேசபக்திக்கும் ஓர் எழுச்சியூட்டும் எடுத்துக்காட்டு என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அவர்களின் அசைக்க முடியாத துணிச்சல், உறுதியான தீர்மானம், தளராத கடமையுணர்வு ஆகியவற்றைக் கண்டு ஒவ்வொரு குடிமகனும் பெருமிதம் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஊக்கமும், துணிவும், உயர்ந்த மன உறுதியும், மேலான ராணுவ தளவாடங்களும் கொண்ட வீரர்களை உடைய ஒரு ராணுவம், நிச்சயமாக வெற்றியை அடையும் என சுபாஷிதம் தெரிவிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2258582&reg=3&lang=1

****

SS/SMB/PD