Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரதமர் மோடி பிரார்த்தனை; நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக மதிப்பிடுமாறு கேட்டுக்கொன்டார்.


ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீவிர நிலநடுக்கத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பிரதமர் திரு, நரேந்திர மோடி பிரார்த்தனை செய்தார். நிலநடுக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உடனடியாக மதிப்பீடு செய்யுமாறு பிரதமர் கேட்டுக்கொன்டார்

“ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பகுதிகளில் ஏற்பட்டுள்ள தீவிர நிலநடுக்கம் குறித்து கேள்விப்பட்டேன். அதன் தாக்கம் இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது நான் அனைவரின் பாதுகாப்பிற்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்.

நிலைமை குறித்த தகவல்களை கேட்டுள்ளேன். ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் என எங்கு தேவை இருப்பினும் நாங்கள் உதவ தயாராக இருக்கிறோம்”, என்று பிரதமர் கூறியுள்ளார்.

•••••