பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய குரூப் ‘ஏ’ சர்வீஸ் மற்றும் ஊழியர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஆயுதம் தாங்கிய எல்லைப் பாதுகாப்புப் படை (சஷாஸ்திர சீமா பல்) (எஸ்.எஸ்.பி.) ‘ஏ’ குரூப் செயல் அதிகாரிகள் குறித்த ஆய்வில் உதவி கமாண்டண்ட் முதல் இன்ஸ்பெக்டர் ஜெனரல் வரை 19 பணியிடங்களை உருவாக்கி எஸ்.எஸ்.பி.யின் செயல்பாட்டு மற்றும் நிர்வாகத் திறன் மேம்படுத்தப்பட்டது.
குரூப் ‘ஏ’ பணியிடங்கள் கட்டமைப்பை தற்போதுள்ள 1253லிருந்து 1272 ஆக கீழே குறிப்பிட்டது போல் அதிகரிக்கப்படுகிறது:
பின்னணி:
எல்லையில் வசிக்கும் மக்களிடையே தேசிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு எண்ணத்தை மேம்படுத்தும் வகையில் 1963ம் ஆண்டு எஸ்.எஸ்.பி. அமைக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்திற்கு மாற்றப்பட்ட பின்னர் அதற்கு இந்திய-நேபாள் மற்றும் இந்திய-பூடான் எல்லைகளை பாதுகாக்கும் பணி அளிக்கப்பட்டது. எஸ்.எஸ்.பி.யானது இடதுசாரி பிரிவினைவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர் மர்றும் அசாம் பகுதிகளில் புலனாய்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது. அதன் தற்போதைய ஒப்புதல் அளிக்கப்பட்ட பலம் 96,093 ஆக 73 பட்டாலியன்களுடன் (3 என்.டி.எல்.எஃப். பட்டாலியன்களுடன்) உள்ளது. இதற்கு முன் 2005, 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் இதனை விரிவுபடுத்தும்/பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
****