பி.எம்.இந்தியா
ஆயுர்வேத தினத்தையொட்டி, நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய மருத்துவத்தின் காலத்தால் அழியாத ஞானம் குறித்து எடுத்துரைத்துள்ள பிரதமர், ஆயுர்வேதம் என்பது வெறும் சிகிக்சை முறையாக மட்டுமின்றி ஆரோக்கியமான, சமநிலையான வாழ்க்கை முறைக்கு ஒரு சிறந்த வழிமுறையாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த செழுமையான பாரம்பரியத்தைப் பின்பற்றுவதற்கான உறுதியை வலுப்படுத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நாளையொட்டி, ஆயுர்வேதத்தின் முழுமையான தன்மையை வலியுறுத்தக்கூடிய சமஸ்கிருத நீதிமொழியையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
மனிதர்களுக்கு எவ்வித வாழ்க்கை முறை நன்மை விளைவிக்கும் அல்லது தீமை ஏற்படுத்தும், மகிழ்ச்சியான அல்லது மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை எவை தீர்மானிக்கும், ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், நோய்வாய்ப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே என்ன வேறுபாடு உள்ளது, நீண்டகால, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு எதை கடைபிடிக்க வேண்டும் அல்லது எதை தவிர்க்க வேண்டும் என்பதை விளக்குவதுடன் ஆயுட்காலத்தின் தன்மை, அளவு குறித்தும் விரிவாக விவாதிக்கக்கூடிய அறிவியல்தான் ஆயுர்வேதமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2313726®=3&lang=1
***
Release ID: 2313726
SS/IR/SM/GS
आयुर्वेद दिवस की सभी देशवासियों को हार्दिक शुभकामनाएं! आयुर्वेद केवल उपचार की पद्धति नहीं, बल्कि स्वस्थ और संतुलित जीवनशैली का एक सशक्त माध्यम है। आइए, अपनी इस समृद्ध विरासत को अपनाने का संकल्प और मजबूत करें।
— Narendra Modi (@narendramodi) September 23, 2026
हिताहितं सुखं दुःखमायुस्तस्य हिताहितम्।
मानं च तच्च… pic.twitter.com/HyPXYhhvdD