பி.எம்.இந்தியா
ஆரக்கிள் நிறுவனத்தின் உலகளாவிய தலைமை நிர்வாக அலுவலர் சாஃப்ரா கட்ஸ் புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
பெங்களூருவை மையமாகக் கொண்டு ஆரக்கிள் நிறுவனம் ஏற்படுத்த உள்ள அதிநவீன வளாகம் பற்றி பிரதமர் மோடியிடம் அவர் விளக்கினார். ஆரக்கிள் அகாடமி மூலம் இந்தியாவில் சுமார் 5 லட்சம் இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர் அறிவியல் திறனை ஏற்படுத்த ஆரக்கிள் நிறுவனம் மேற்கொண்டு வரும் முயற்சி குறித்தும் பிரதமரிடம் விளக்கப்பட்டது.
பிரதமர் திரு மோடியின் “இந்தியாவில் தயாரிப்போம்” திட்டத்திற்கும் இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த வடிவமைப்பு மற்றும் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கும் ஆரக்கிள் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகள் ஊக்கம் அளிக்கும் என்று கருதுவதாகவும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது.
ஆரக்கிள் நிறுவனத்தின் இந்த முன்முயற்சிகளை பிரதமர் பாராட்டினார்.