பி.எம்.இந்தியா
இங்கிலாந்தின் சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரீத்தி படேல் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சர்வதேச மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக செல்வி படேல் நியமிக்கப்பட்டதை ஒட்டி பிரதமர் தனது வாழ்த்தை தெரிவித்தார். செல்வி படேல் தனது முந்தைய பதவிகளில் இருந்தபோது இந்தியாவுக்குப் பலமுறை பயணம் மேற்கொண்டதன் மூலம் இந்தியாவுடன் நல்லுறவை நிலைநாட்டினார் என்பதைப் பிரதமர் நினைவு கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது வெற்றிகரமான இங்கிலாந்து பயணத்தை நினைவு கூறிய பிரதமர், தனது பயணத்துக்குப் பின்பு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பாராட்டினார்.
சர்வதேச மேம்பாட்டுத்துறை இந்தியாவில் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகளில் மற்றும் வருங்காலத் திட்டங்கள் குறித்து பிரதமரிடம் விவரித்தார். திறன் மேம்பாடு, உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான நிதி, புதிய கண்டுபிடிப்புகள், எரிசக்தி, சுலபமாக தொழில் செய்வது ஆகிய துறைகளில் இருநாடு ஒத்துழைப்புக் குறித்து செல்வி படேல் விலக்கினார்.