Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற தெரெசா மேவிற்கு பிரதமர் வாழ்த்து; இந்தியா-இங்கிலாந்தின் உறவினை வலுப்படுத்த திரு. டேவிட் கேமரூன் எடுத்த முயற்சிகளை பாராட்டினார்.


இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்ற திருமதி. தெரெசா மேவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து இடையேயான உறவினை வலுப்படுத்த திரு. டேவிட் கேமரூன் எடுத்த முயற்சிகளுக்காக பிரதமர் அவருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

“இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றதற்காக திருமதி. தெரெசா மேவிற்கு எனது வாழ்த்துகள். இந்தியா-இங்கிலாந்து இடையேயான உறவினை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து செயல்பட காத்திருக்கிறேன்.

மேலும், இந்தியா-இங்கிலாந்து உறவினை வலுப்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட திரு. டேவிட் கேமரூனுக்கு எனது பாராட்டுகள்” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.