Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இங்கிலாந்து ராணிக்கு பிரதமரின் அன்பளிப்பு

54 ஆண்டுகளுக்கு முன், புது தில்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இங்கிலாந்து ராணி 1961 ஆம் ஆண்டு ஜனவரி – பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு வருகை தந்தார். அவர் வருகையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு பரிசாக அளித்தார். இந்த பயணத்தின்போது இங்கிலாந்து ராணி சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, உதைப்பூர், ஜெய்ப்பூர், அகமதாபாத், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வருகை தந்திருந்தார்.

முதல் புகைப்படம் ஜனவரி 31, 1961 அன்று அவர் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தை அவர் பார்வையிட்டபோது எடுத்தது. மகாத்மா காந்தியின் 13-வது நினைவு நாளுக்கு அடுத்த நாள் ராணி ஆசிரமத்திற்கு வந்திருந்தார். இரண்டாவது, பிப்ரவரி 19, 1961 அன்று அன்றைய மெட்ராசிற்கு (சென்னை) வந்திருந்த ராணிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு விழாவில் எடுத்தப் புகைப்படம். அப்போது, இளவரசர் ஆண்ட்ரூ, யார்க் கோமகனின் முதல் பிறந்தநாளையொட்டி ராணிக்கு கேக் வழங்கப்பட்டது. மூன்றாவது புகைப்படம் பிப்ரவரி 25, 1961 அன்று எடுக்கப்பட்டது. அதில் ராணி வாரணாசியின் பாலுவாகாட்டிற்கு சொந்தமான யானையில் சவாரி செய்கிறார். மற்றொரு புகைப்படம் பிப்ரவரி 24, 1961 அன்று டிராம்பேயில் உள்ள அணுசக்தி மையத்தை பார்வையிட்டபோது எடுத்தப்படம்.

மேற்கு வங்காளத்தில் உள்ள மக்கைபாரி தேயிலை தோட்டத்தில் இருந்து கிடைக்கும் பல விருதுகளை வென்ற டார்ஜீலிங் தேயிலைகள், ஜம்மு காஷ்மீரில் இருந்து கிடைக்கும் இயற்கை தேன் மற்றும் வாரணாசியின் புகழ்மிக்க தன்ச்சோய் ஸ்டோல்ஸ் ஆகியவற்றையும் பிரதமர் ராணிக்கு பரிசாக வழங்கினார்.

***