பி.எம்.இந்தியா
இந்தியா-இத்தாலி இடையிலான இருதரப்பு உறவுகள் எவ்வாறு ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளன என்பதை விவரித்து இத்தாலிப் பிரதமர் திருமிகு ஜார்ஜியா மெலோனியுடன் இணைந்து தாம் எழுதியுள்ள கட்டுரை ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (20.05.2026) பகிர்ந்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு ஒரு சிறப்பு உத்திசார் கூட்டாண்மை என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார். இந்த வலுவான உறவு, புத்தாக்கம், பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், எதிர்காலத்திற்கான பொதுவான தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றால் உறுதியாக இயக்கப்படுகிறது என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“இந்தியா-இத்தாலி இடையிலான இருதரப்பு உறவுகள் எவ்வாறு ஒரு தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளன என்பது குறித்து பிரதமர் மெலோனியுடன் இணைந்து ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். எங்களின் சிறப்பு உத்திசார் கூட்டாண்மை என்பது புத்தாக்கம், பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், எதிர்காலத்திற்கான பொதுவான தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றால் உறுதியாக இயக்கப்படுகிறது.”
***
SS/SMB /KR
Penned an op-ed with PM Meloni on how India-Italy ties have reached a decisive stage. Ours is a Special Strategic Partnership driven by innovation, shared democratic values and a common vision for the future.@GiorgiaMeloni https://t.co/4eEMaaInGc
— Narendra Modi (@narendramodi) May 20, 2026