Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

3-வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டுக்கிடையே ஐஸ்லாந்து பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

3-வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டுக்கிடையே ஐஸ்லாந்து பிரதமருடன் பிரதமர் சந்திப்பு


பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆஸ்லோவில், 3வது இந்தியா–நார்டிக் உச்சிமாநாட்டின் இடையே, ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் ஃப்ரோஸ்டடோட்டிருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

பிரதமர் ஃப்ரோஸ்டடோட்டிர் பதவியேற்றதிலிருந்து இரு தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்த முதல் நிகழ்வு இதுவாகும். ஐஸ்லாந்து வரலாற்றிலேயே இளைய பிரதமராக பொறுப்பேற்றதற்காக பிரதமர் மோடி, பிரதமர் ஃப்ரோஸ்டடோட்டிருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியா–ஐரோப்பிய சுதந்திர வர்த்தக சங்கம், வர்த்தக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் அமலுக்கு வரும் சூழலில், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர். வர்த்தகம், முதலீடு மற்றும் உற்பத்தித் துறைகளில் உள்ள உண்மையான இருதரப்பு திறன்களை வெளிக்கொணர இது ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று இருவரும் ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.

மேலும், அனல் எரிசக்தி , மீன்வளம், புதுமை தொழில்நுட்பங்கள், படைப்பாற்றல் பொருளாதாரம், கலாசாரம், சுற்றுலா, மக்கள் இயக்கம் மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் போன்ற துறைகளில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பின் முன்னேற்றத்தையும் இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். ஆர்க்டிக் ஆராய்ச்சி துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

இருதரப்புக்கும் ஏற்ற நேரத்தில் இந்தியாவுக்கு வருமாறு ஐஸ்லாந்து பிரதமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

 

(Release ID: 2262936)

****

TV/PKV/SH