பி.எம்.இந்தியா
இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 75-வது நினைவு நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். சர்தார் படேல் தமது முழு வாழ்க்கையையும் தேசத்தை ஒன்றிணைத்து, இந்தியாவை ஒற்றுமையின் ஒற்றை இழையாகப் பின்னுவதற்கு அர்ப்பணித்ததாக அவர் கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த மற்றும் வலுவான இந்தியாவை உருவாக்குவதில் சர்தார் படேலின் ஈடு இணையற்ற பங்களிப்பு நாட்டு மக்களின் நினைவில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.
சர்தார் படேலின் வாழ்க்கை ஒரு தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு ஒரு சிறப்பு உத்வேகத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது என்று பிரதமர் கூறியுள்ளார். இந்தியாவின் இரும்பு மனிதர் விதைத்த தேசிய ஒற்றுமையின் உணர்வு, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சக்திவாய்ந்த ஆற்றல் ஆதாரமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டைக் கட்டமைப்பதில் சர்தார் படேலின் ஈடு இணையற்ற பங்களிப்பு, அவரது தீர்க்கமான தலைமைத்துவம், இந்தியாவின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை ஒரு வலுவான மற்றும் திறமையான தேசத்திற்கு என்றென்றும் வழிகாட்டும் சக்தியாக செயல்படும் என்று பிரதமர் திரு மோடி எடுத்துக் காட்டியுள்ளார்.
***
SS/PKV/KR
लौह पुरुष सरदार वल्लभभाई पटेल को उनकी 75वीं पुण्यतिथि पर मेरा सादर नमन। उन्होंने देश को एकसूत्र में पिरोने के लिए अपना जीवन समर्पित कर दिया। अखंड और सशक्त भारतवर्ष के निर्माण में उनका अतुलनीय योगदान कृतज्ञ राष्ट्र कभी भुला नहीं सकता।
— Narendra Modi (@narendramodi) December 15, 2025