பி.எம்.இந்தியா
இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான முயற்சிகளை எடுத்துரைத்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் புது உத்வேகத்துடன் பாதுகாக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு, முன்னோக்கி எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறியுள்ளார்.
‘பாரம்பரியமும் வளர்ச்சியும்‘ என்ற தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலுடன், தொல்பொருட்களைத் தாயகம் திரும்பக் கொண்டுவருவது முதல் ஆன்மீகம் மற்றும் புனித யாத்திரை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது வரையிலான முயற்சிகள், இந்தியாவின் காலத்தால் அழியாத பாரம்பரியங்களுடன் மீண்டும் மக்களை இணைக்கின்றன என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
“இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் புது உத்வேகத்துடன் பாதுகாக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு, முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.
‘பாரம்பரியமும் வளர்ச்சியும்‘ என்ற தொலைநோக்குப் பார்வையின் வழிகாட்டுதலுடன், தொல்பொருட்களைத் தாயகம் திரும்பக் கொண்டுவருவது முதல் ஆன்மீகம் மற்றும் புனித யாத்திரை உள்கட்டமைப்பை வலுப்படுத்துவது வரையிலான முயற்சிகள், இந்தியாவின் காலத்தால் அழியாத பாரம்பரியங்களுடன் மக்களை மீண்டும் இணைக்கின்றன.”
****
(Release ID: 2274536)
SS/SMB/SH
India’s cultural heritage is being preserved, celebrated and carried forward with renewed vigour.
— Narendra Modi (@narendramodi) June 18, 2026
Guided by the vision of ‘Virasat Bhi, Vikas Bhi’, efforts ranging from the repatriation of antiquities to strengthening spiritual and pilgrimage infrastructure are reconnecting… https://t.co/E2Oe8RBeKU