Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு பயணத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்


இந்தியாவின் டிஜிட்டல் உட்கட்டமைப்பு பயணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளதாக பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்துள்ளார். இந்தியாவில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யவும், 5 ஜிகாவாட் அளவுக்கு தரவு மையத் திறனை மேம்படுத்தவும் ஏர் ட்ரங்க் நிறுவனம் அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர், இது நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு சூழல் அமைப்பில் மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் என்பதற்கான உலகளாவிய மையமாக இந்தியா நிலை பெறுவதை இத்தகைய முதலீடு கணிசமான அளவு வலுப்படுத்தும் என்று திரு மோடி கூறியுள்ளார். இத்தகைய முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு உள்ளூர் விநியோக சங்கிலிக்கு உதவி செய்யும் என்றும் புத்தாக்க அடிப்படையிலான வளர்ச்சியை விரைவுபடுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். உலகின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்காலம்  அதிகப்பட்சமாக இந்தியாவில் வடிவமைக்கப்படும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பயணம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யவும், 5 ஜிகாவாட் அளவுக்கு தரவு மையத் திறனை  மேம்படுத்தவும் ஏர் ட்ரங்க் நிறுவனம் அறிவித்துள்ளது. இது நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு சூழல் அமைப்பில் மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்றாகும்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் என்பதற்கான  உலகளாவிய மையமாக இந்தியா நிலை பெறுவதை இத்தகைய முதலீடு கணிசமான அளவு வலுப்படுத்தும். இத்தகைய முதலீடுகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு உள்ளூர் விநியோக சங்கிலிக்கு உதவி செய்யும். புத்தாக்க அடிப்படையிலான வளர்ச்சியை விரைவுபடுத்தும், உலகின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் எதிர்காலம் அதிகபட்சமாக இந்தியாவில் வடிவமைக்கப்படும் என்பது உறுதி.”

(Release ID: 2269354)

****

TV/SMB/KPG/SH