பி.எம்.இந்தியா
இந்தியாவின் நீர் மேலாண்மை மாதிரி வளரும் நாடுகளுக்கு எவ்வாறு பயன்மிக்க தகவல்களை அளிக்கிறது என்பது குறித்த கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். நீர் பாதுகாப்பு என்பது வெறும் உள்கட்டமைப்பை உருவாக்குவது மட்டுமின்றி, சிறந்த திட்டமிடல், வலுவான உள்ளாட்சி அமைப்புகள், நீர் மேலாண்மையில் சமூகங்களை ஈடுபடுத்துதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது என்று திரு மோடி கூறினார்.
குஜராத்தில் கடைபிடிக்கப்பட்ட நீர் சார்ந்த சீர்திருத்தங்கள் முதல் பெருமளவிலான தேசிய திட்டங்கள் வரையிலான நாட்டின் பயணம் நீர் மேலாண்மையை மேம்படுத்தவும் வளர்ந்து வரும் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் விரும்பக்கூடிய நாடுகளுக்கு நடைமுறை உதாரணமாக அமைந்துள்ளது என்று திரு மோடி தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது;
இந்தியாவின் நீர் மேலாண்மை மாதிரி வளரும் நாடுகளுக்கு பயன்மிக்க தகவல்களை அளிக்கிறது. நீர் பாதுகாப்பு என்பது வெறும் உள்கட்டமைப்பை உருவாக்குவது மட்டுமின்றி, சிறந்த திட்டமிடல், வலுவான உள்ளாட்சி அமைப்புகள், நீர் மேலாண்மையில் சமூகங்களை ஈடுபடுத்துதல் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.
குஜராத்தில் கடைபிடிக்கப்பட்ட நீர் சார்ந்த சீர்திருத்தங்கள் முதல் பெருமளவிலான தேசிய திட்டங்கள் வரையிலான நாட்டின் பயணம் நீர் மேலாண்மையை மேம்படுத்தவும் வளர்ந்து வரும் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் விரும்பக்கூடிய நாடுகளுக்கு நடைமுறை உதாரணமாக அமைந்துள்ளது.
***
(Release ID: 2319539)
SS/IR/SM/SH
From India, a water-governance model is offering useful lessons for the wider Global South. Water security is not only about building infrastructure but also about good planning, strong local systems and involving communities in managing water. India's journey from water reforms in Gujarat to large-scale national programmes offers a practical example for countries looking to improve water management and meet growing water needs. https://t.co/9ZztUeZoAH
— PMO India (@PMOIndia) October 6, 2026