பி.எம்.இந்தியா
பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று குடியரசு துணைத்தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரையைப் பகிர்ந்துள்ளார். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் ‘நீலப் புரட்சி‘யை மற்றொரு வெற்றிக் கதையாக மாற்றி வருவதாக திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் கடல்சார் வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள, நாடு தற்போது தமது கடற்கரை எல்லைகளுக்கும் அப்பால் செயல்பட்டு வருவதை இக்கட்டுரை குறிப்பிடுகிறது. மேலும், நிலையான மீன்வளத் தொழில் நடவடிக்கைகள் கடலோரச் சமூகங்கள், இளைஞர்கள், மகளிருக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கி, கடலோர இந்தியாவின் பொருளாதார வாழ்வை வலுப்படுத்துகின்றன.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“குடியரசு துணைத்தலைவர் திரு. சி. பி. ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள இந்தக் கட்டுரை அவசியம் படிக்க வேண்டிய ஒன்றாகும். பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் ‘நீலப் புரட்சி‘யை மற்றொரு வெற்றிக் கதையாக மாற்றி வருவதாக அவர் அதில் எழுதியுள்ளார். இந்தியாவின் கடல்சார் வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள நாடு தற்போது தனது கடற்கரை எல்லைகளுக்கும் அப்பால் செயல்பட்டு வருவதாக அவர் கூறுகிறார். நிலையான மீன்வளத் தொழில் நடவடிக்கைகள் கடலோரச் சமூகங்கள், இளைஞர்கள், மகளிருக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இது கடலோர இந்தியாவின் பொருளாதார வாழ்வையும் வலுப்படுத்துகிறது.”
***
(Release ID: 2311314)
TV/IR/GS/SM
A must-read article by @VPIndia Thiru @CPR_VP, in which he writes that under PM @narendramodi's leadership, Bharat's growth story is making the Blue Revolution another success story.
— PMO India (@PMOIndia) September 17, 2026
He says India is now looking beyond its shores to unlock its marine wealth. Sustainable… pic.twitter.com/XyGGlkZWJ8