Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவில் நீர் பாதுகாப்பு குறித்த தேசிய பிரச்சாரம் தொடர்பாக இஸ்ரேல் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்தியாவில் நீர் பாதுகாப்பு ./ சேமிப்பு குறித்த தேசிய பிரச்சாரம் தொடர்பாக இஸ்ரேல் இந்தியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எதிர்கால தலைமுறைக்கு நீர் பாதுகாப்பு என்ற பெரும் பயனை வழங்க இந்த ஒப்பந்தம் வகை செய்யும்.

தொழில்முறை சார்ந்த வடிவமைப்புடன் கூடிய தேசிய நீர் பாதுகாப்பு திட்ட த்தை வடிவமைத்து செயல்படுத்தும் பிரச்சாரத்தை இந்தியாவில் மேற்கொள்ள தேசிய, மண்டல, சர்வதேச அளவில் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து உருவாக்கவும, அதற்கான பணிகளை மேற்கொள்ளவும் ஒப்பந்தம் வகை செய்கிறது.

கீழ்க்கண்ட நோக்கங்களை நிறைவேற்றும் விதமாக நீர் பாதுகாப்பு பிரச்சாரத்தைமேற்கொள்ள கூட்டாக செயல்படவும் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

(அ) நீர் பாதுகாப்பை தேசிய கொள்கை குறிப்பாக இந்தியாவில் மேற்கொள்ளுதல்

(ஆ) ஒவ்வொரு குடிமகனும் தங்கள் அன்றாட வாழ்க்கை நடைமுறையில் நீர் சேமிப்பை மேற்கொள்வதற்கு ஊக்குவிப்பு அளித்தல்

(இ) தண்ணீர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

(ஈ) தண்ணீரை மீண்டும் பயன்படுத்துதல், மறு உற்பத்தி செய்தல், மறுசுழற்சி செய்தலை ஊக்குவித்தல்

(ஈ) நீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து டிஜிட்டல் முறையில் அதாவது வலைத்தளம், மொபைல் செயலிகளை மேம்படுத்துதல்

========